தமிழக பஞ்சாயத்துத் தேர்தலில் ஊடகங்களின் நிலையைக் கண்காணிக்க வருகிறோம்
கடந்த தமிழக பொதுத் தேர்தலின் போது, தமிழக ஊடகங்கள் இயங்கிய விதம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வலைப்பதிவின் மூலம் வெளியிட்டுவந்த, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையில், பத்திரிகையியல் பயிலும் மாணவர்களாகிய நாங்கள், அது போன்றதொரு பணியை, மீண்டும், தமிழக பஞ்சாயத்துத் தேர்தலின் போதும் செய்து முடிப்பது என்று திட்டமிட்டிருக்கிறோம்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது முடிந்ததும் (அதாவது அடுத்த 2 நாட்களில்) எங்களின் கண்காணிப்புப் பணி, காய்தல் உவத்தல் இன்றித் தொடங்கி நடைபெறும்.
தமிழ் கூறும் நல்லுலகம், எங்களின் விமர்சனம் குறித்த விமர்சனங்களை வழங்கினால், எங்களின் கற்றல் பணியைச் செவ்வனே செய்ய ஏதுவாக இருக்கும்.
மீடியா வாட்ச் குழுவினர்